செம்போத்து

இதழ்,தமிழர்,ஈழம்.

21 July 2009

அழிவின் தொடக்கத்தில் தமிழினம்

அழிவின் தொடக்கத்தில் தமிழினம்

ஈழத்தின் யுத்தம் முடிந்தது.முடிவை இந்திய பிரதமரும் இலங்கை அதிபரும் பரிமாரிகொண்டனர்.
வெளியறிக்கை மட்டும் தமிழர்களின் நலன் சம்மந்தமாக பேசியதாக அறிக்கை வாசித்தனர்.

யுத்தம் முடிந்தும் வேலிக்குள் சிக்கி இருக்கின்றனர் தமிழர்கள்.

அதற்கான கருத்துக்கள் ஏதும் இன்றி உணர்வின்றி இருக்கின்றனர் இந்திய தமிழர்கள்.

நான் சமிபத்தில் சந்தித்த என்னுடைய நண்பர் ஒருவரிடம் இலங்கை தமிழர்கள் பற்றி துயரத்துடன் பேசினேன்.

நண்பர் என்னிடம் பறிமாறி கொண்ட தகவல் என்னை மிகவும் அதிரவைத்தது.

'அவங்க நாட்டுல நம்ம ஆலுங்க தனிநாடு கேட்பது தப்புதானே' என்றார்.

மேலும்...

விடுதலைபுலிகள் தான் தமிழர்களை கொள்கின்றனர் இராணுவம் அவர்களை காப்பாற்றியதாக கூறினார்.

யார் இந்த மாதிரி விஷியத்தை பரப்புகின்றனர் என்று தெரியவில்லை.

என்னுடைய நண்பரை போல இன்னும் பல தமிழர்களுக்கு விஷியம் என்ன என்று தெரியாவிட்டாலும் தாங்களுக்கு தோன்றும் கருத்தை தெரிவிக்கின்றனர்.மேலும் சில அரசியல் கட்சிகளும் இதை வளர்கின்றன.

இவர்களுக்கு சரியாக விஷியத்தை சொல்ல வேண்டும்.

முன்பு போல தமிழர்கள் செய்திதாள்களை அவ்வளவாக படிப்பதில்லை
டிவி தான் அவர்கள் பார்கின்றனர். உபயம் கலைஞர்.

டிவியிலும் உணர்வு சம்பந்தமாக எந்த செய்தியையும் சம்பந்தபட்ட தொலைகாட்சிகள் காட்டுவதில்லை மக்கள் காட்சி தவிற.

சமிபத்தில் விஜய் டிவி காட்சி ஒன்றில் சென்னையில் நடைபெற்ற அழகி போட்டியை காட்டினர்.
அதில் சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா?
தமிழனை கொன்ற இலங்கை அதிபரின் மனைவி...

அவர் மற்றும் நம்முடைய சில தமிழ் சினிமாகார்களும் அதில் பங்கு பெற்றதுடன் அவர்கள் பின்வருமாரு கருத்தை வேறு கூறினர்.

இவ்வாறு நடக்கும் -சமூக-நிகழ்ச்சியில் இந்தியாவும் இலங்கையும் பங்கு பெறுவதனால் இருநாடுகளுக்கும் நட்புறவு பலபடுமாம்.

தமிழன் சூடுசுறனை அற்று போனான்.

Read more...